துப்பாக்கி முனையில் இரண்டு வங்கிக் கொள்ளை முறியடிப்பு

0
719
Woman injured shooting bank robbery Gandara tamilnews

(Gunpoint Two bank robber Foiled)
கொள்ளையர்களால் வங்கிகளில் கொள்ளையடிக்கும் முயற்சிகள் நேற்றைய தினம் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மொனராகலை, ஹூலந்தாவ சந்தியிலுள்ள கிராம வங்கியினுள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளைக் கும்பல், வங்கி ஊழியர் ஒருவருக்கு துப்பாக்கியைக் காண்பித்து, பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சித்த போது சக ஊழியர்கள் உரத்த குரலில் கூச்சலிட்டனர்.

இதனையடுத்து, வங்கிக்குள் பொதுமக்கள் வருவதைக் கண்ட கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளில் புத்தல நோக்கி தப்பித்து ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொள்ளையர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் அரச சேவையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் கொடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என்றும் இதன் இலக்கத்தகடு அகற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் நேற்று காலை 10.45 மணியளவில் நடைபெற்றுள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வத்தளை, ஹெந்தலை, எலகந்த பிரதேசத்திலுள்ள தனியார் வங்கியினுள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் பணம் கொடுக்கல், வாங்கல் செய்யும் இடத்திற்கு சென்று காசாளர் முகத்தில் மிளகாய் தூள் தூவி பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனைக் கண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வங்கியின் வெளியே சென்று வங்கியின் கதவுகளை மூடிவிட்டுள்ளார்.

பின்னர் பொது மக்களின் உதவியுடன் வங்கி ஊழியர்கள் கொள்ளையரை மடக்கி பிடித்து, வத்தளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளதாகவும் சந்தேக நபரை இன்றைய தினம் மஹர நீதவான் முன் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Gunpoint Two bank robber Foiled