{ election commission warn }
மலேசியா, முன் கூட்டியே வாக்களிப்போருக்கான பணி நாளை தொடங்கவிருப்பதை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தை ஏமாற்றலாம் என்ற நோக்கத்துடன் புதன்கிழமை நடக்கும் தேர்தல் நாளன்று மீண்டும் வாக்களிக்கலாம் என்று நினைக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருமுறை வாக்களிக்கும் வாக்காளர்கள் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அந்த ஆணையத்தின் துணைத் தலைவர் டான்ஶ்ரீ ஒஸ்மான் மஹ்மூட் கூறியுள்ளார்.
ஒருவர் ஓர் அடையாள அட்டை கொண்டுதான் வாக்களிக்க முடியும் என்றும், அதே நபர் மீண்டும் வாக்களிக்க முயன்றால், அந்த அடையாள அட்டைக் கொண்டு, தேர்தல் ஆணையம் கண்டு பிடித்து விடும் என்று ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் நாளன்று, அனைவரின் ஆவணங்களை சோதனை செய்த பின்னர் தான், வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அதனைக் கருத்தில் கொண்டு வாக்காளர்கள் பொறுப்பாக வாக்களிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
“அதுமட்டுமல்லாது, தேர்தலின் போது வைக்கப்பட்டிருக்கும் வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தும். அந்தப் பெட்டிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம்” என்று அவர் விவரித்துள்ளார்.
நாடு தழுவிய நிலையில், மக்கள் வாக்களிக்கும் பொருட்டு, 938 தேர்தல் மையங்கள் அமைக்கப்படும் என்றும், அவற்றில் 240 மையங்கள் மலாக்காவில் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இருந்த போதிலும், நாடு தழுவிய நிலையில் நாளை 31 தேர்தல் மையங்கள் தான் திறந்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags: election commission warn
<< TODAY RELATED MALAYSIA NEWS>>
*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!
*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா
*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!
*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!