பாதுகாப்பை மீறி மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர்! : நடந்தது என்ன? (காணொளி)

0
1138
Dhoni Fan Kolkata Eden Garden news Tamil

(Dhoni Fan Kolkata Eden Garden news Tamil)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியின் இடையில் சுவாரஷ்யமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் அதிகம். அதிலும் இந்தியாவில் அவரது ரசிகர்களுககு பஞ்சமில்லை.

சில சந்தர்ப்பங்களில் டோனியை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் மைதானத்துக்குள் ரசிகர்கள் நுழைந்த சம்பவங்கள் இருக்கின்றன.

அதேபோன்று நேற்றைய போட்டியில் சென்னை துடுப்பெடுத்தாடும் போது, எல்லைக்கோட்டுக்கு அருகில் வீரர்களுடன் கலந்துரையாடி கொண்டிருந்த டோனியின் அருகில் பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் நுழைந்துள்ளார்.

குறித்த ரசிகர் டோனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றபோது, பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த ரசிகரை உடனடியாக வெளியேற்றியுள்ளனர்.

ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து டோனியின் காலில் விழுந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

video credits – @IPL

<<Tamil News Group websites>>