பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை

0
1406
Will not allow Shortage milk powder

(Will not allow Shortage milk powder)
நாட்டில் பால்மா தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பால்மா தட்டுப்பாடு நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு சதொச மூலம் பால்மா இறக்குமதி செய்யப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பால்மாவின் விலையை உயர்த்துவதற்கு பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் பலமுறை முயற்சி செய்துள்ளன.

என்றாலும் பாவனையாளர்களின் நன்மை கருதி அதற்கு இடமளிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர்,

இறக்குமதி செய்யப்படும் பால்மா கிலோ ஒன்றின் விலையை 50 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பாக அலோசனை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

இதேவேளை, உலக சந்தையில் பால்மாவின் விலை கடந்த வாரம் அதிகரித்தமையால் பால்மா இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் ஒரு மெற்றிக்தொன் பால்மாவின் விலை 3,250 அமெரிக்க டொலரில் இருந்து 3,350 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இது ஜுன் மாதத்தில் 3,400 முதல் 3,500 அமெரிக்க டொலாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறக்குமதி செலவை ஈடுசெய்யும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையின் பால்மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலருக்கான ரூபாவின் வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது கையிருப்பிலுள்ள பால்மாக்கள் எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களுக்கே போதுமானது என்றும், அதன் பின்னர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இறக்குதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை ஆகக் குறைந்தது 75 ரூபாவினால் அதிகரிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவிடம் பால்மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Will not allow Shortage milk powder