(Alpine accident seventh victim)
மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் சுவிஸ் மலையில் பனிச்சறுக்கல் செய்த நான்கு பேர் ஏற்கனவே சம்பவ இடத்திலேயே இறந்ததாக சில நாட்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 5 பனிச்சறுக்குபவர்கள் மொசமான நிலையில் இருப்பதாக Valais பொலிசார் தெரிவித்திருந்தனர்.
நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள இந்த மலைக்கு சென்ற 14 பேர்களிலேயே 4 பேர் இறந்ததாகவும், 5 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அதிக காற்றழுத்தம், பனிப்பொழிவு மற்றும் குளிரால் அன்றைய இரவை அவர்கள் வெளியே கழிக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டது என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஏழு ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பரந்த மீட்பு நடவடிக்கைகள் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு, மாட்டிக்கொண்ட இந்த பனிச்சறுக்கு செய்தவர்களை பொலிசார் கண்டு பிடித்தனர்.
மோசமாக பாதிக்கப்பட்டிருந்த 5 பேரில் இருவர், மீட்டெடுப்பின் சில மணி நேரங்களின் பின் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி புதனன்று மருத்துவமனையில் இறந்துள்ளார்.
Alpine accident seventh victim, Alpine accident seventh, Alpine accident, accident seventh victim, seventh victim, Tamil Swiss news, Swiss Tamil news
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/03/mother-abandons-baby-caught-shoplifting/
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com