புயலின் பின் அமைதி! : மாற்றுவாரா லாங்கர்?

0
716
Australia New Coach Langer

Australia New Coach Langer

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜஸ்டின் லாங்கர், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று காலை அறிவித்துள்ளது.

கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சுரண்டி சேதப்படுத்திய விவகாரத்தை அடுத்து, முன்னாள் பயிற்சியாளர் டெரன் லீமன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தநிலையில் அவரது இடத்துக்கு தற்போது ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே 22 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதவியை பொறுப்பேற்கவுள்ள ஜஸ்டின் லாங்கர், அடுத்த நான்கு வருடங்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகளுக்கான பயிற்சியாளராக செயற்படுவார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பந்தை சுரண்டி சேதப்படுத்திய விவகாரத்தில் பாரிய சர்ச்சை ஏற்பட்டு அணியின் முக்கிய வீரர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில், மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் ஜஸ்டின் லாங்கர் தனது பணியை முன்னெடுப்பார் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.