பல்வேறு காரணங்களால் ஶ்ரீ லங்கன் விமானங்கள் தாமதம்

0
667
tamilnews Several SriLankan Airlines flights delayed due various reasons

(tamilnews Several SriLankan Airlines flights delayed due various reasons)

பல்வேறு விதமான காரணங்களால் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான சில விமானங்கள் இன்று (03) தாமதமாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாட்டிலிருந்த வந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக ஶ்ரீ லங்கன் விமானமொன்று கொச்சின் விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பப்பட்டது.

அதேவேளை, குவைட்டிலிருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் ஒன்று புழுதிப் புயல் காரணமாக விமானத்தில் தொடர்ச்சியான பயணத்திற்கு பொறியியல் துறைசார்ந்தவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், மேலும் இரண்டு விமானங்கள் தொழினுட்ப பிரச்சினை காரணமாக தாமதமடைந்த நிலையில் அவை மீள திருத்தியமைக்கப்பட்டு பயணத்தை தொடர்ந்ததாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இதனிடையே. கொழும்பு – மெல்பர்னுக்கு இடையிலான யூ.எல்.884, ஜெட்டாவுக்கான யூ.எல்.281, கோலாலம்பூருக்கான யூ.எல்.314, பெங்கொக்கிற்கான யு.எல்.406 மற்றும் மெல்பர்னிலிருந்து கொழும்புக்கு பயணிக்கவிருந்த யூ.எல்.604 ஆகிய விமானங்கள் நீடித்த தாமதத்தை எதிர்நோக்கியுள்ளன.

இதன்காரணமாக பயணிகள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவை, அவர்களுக்கான தங்குமிட வசதிகளையும், போஷண வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(tamilnews Several SriLankan Airlines flights delayed due various reasons)

More Tamil News

Tamil News Group websites :