நாளை முதல் இடியுடனான மழை : மக்களுக்கு எச்சரிக்கை

0
2425
3 day Heavy Rain Forecast Department of Meteorology

3 day Heavy Rain Forecast Department of Meteorology

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்பிரகாரம் மேற்கு, வடமேற்கு மற்றும் தெற்கு கடற்கரையோரங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி , மாத்தறை , அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று(03) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலிருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் எனவும் இடி மின்னலிலிருந்து பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :