பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

7
1896
Tamil National People's Front May Day Controversy Speech Issue

(Tamil National People’s Front May Day Controversy Speech Issue)

தலைவர்!

இந்த தலைவர் என்னும் சொல் மற்றைய இனங்களை பொறுத்தவரை வெறுமையாக இனத்தை தலைமை தாங்குபவன் என்னும் பொருளில் முடியும். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை , காலம் காலமாக அடிமைப்பட்டு கிடந்த ஒரு இனத்தின் அடிமை சங்கிலிகளை உடைத்தெறிந்த ஒரு உன்னத மனிதனுக்கான ஸ்தானம் ஒன்றை வழங்கி நிற்கிறது.

Image result for prabhakaran

தமிழனத்தை பொறுத்தவரை பல அரசியல் தலைவர்கள் இருந்தார்கள் தற்போதும் இருக்குறார்கள். ஆனால் இனத்தின் தலைவர் என்னும் விடயத்தில் மக்கள் எப்போதும் கூறி பெருமை பட்டு கொள்வது மேன்மை தங்கிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையே.

அது மட்டுமல்ல , தலைவர் என்னும் பதவிக்கு பின்னால் உள்ள எண்ணிலடங்கா தியாகங்களையும் , அந்த பதவியின் நிலை பெருகைக்கு பல்லாயிரம் மாவீரர்களின் உயிர் கொடைகளையும் சேர்த்து தான் அதன் புனித தன்மை இன்று வரை மக்களால் மதிக்கப்பட்டு வருகின்றது.

Related image

இந்நிலையில் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்டத்தில் , அந்த கட்சியின் தலைவர் பொ கஜேந்திரகுமாரை தமிழீழ தேசிய தலைவராக சித்தரித்து கூறப்பட்டுள்ள கருத்து தொடர்பில் பலத்த வாதங்கள் எழுந்துள்ளது.

உண்மையில் , அந்த உரையில் கூறப்பட்டுள்ள விடயம் வேறு ஒரு கருத்தில் கூறப்பட்டிருக்கலாம் ஆனால் அது பொதுவெளியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது.

தமிழ் மக்கள் தற்போது தேடி கொண்டிருப்பது தலைவரின் பாதையில் தளராது பயணிக்கும் ஒருவரையே அன்றி அடுத்த தலைவரை அல்ல.

இந்த உண்மையை புரிந்து கொண்டவர்களாக அவரின் பாதையில் பயணிக்கும் தரப்புகளை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள், அதனை விடுத்து தம்மை தலைவருக்கு இணையாக சித்தரிக்கும் தரப்புகளை பாகுபாடின்றி மக்கள் விலத்தி வைப்பார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த சர்ச்சை தொடர்பில் வெளிப்படையான விளக்கம் ஒன்றை வழங்க முன்வராதவிடத்து அவர்களின் அரசியல் பயணத்தில் இந்த விடயம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

கழுத்து வெட்டி பிரிகேடியரும் நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு சொல்லி இருக்கும் செய்தி என்ன?

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மைத்திரியின் உதாசீனம் ! தீர்வில்லாமல் போகுமா மக்கள் போராட்டம்?

சுதந்திரதினத்தில் கலந்துகொள்ளாமல் நழுவிய கூட்டமைப்பின் தேர்தல் கால தந்திரம்!

சாதிய சிந்தனைக்குள் மூழ்கடிக்கப்படுமா தமிழரின் விடுதலை உணர்வு?

தமிழ் ஊடக சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்!

புலி எதிர்ப்பு! சாதிய விதைப்பு! வடக்கை இந்தியாவின் மாநிலமாக்க துடிக்கிறார்களா இந்திய கொள்கை வகுப்பாளர்கள்?

அண்ணன் பிரபாகரன் திரும்ப வருவார்! தமிழ் நிலங்களை விற்காதீர்கள்! அரசியற்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வனின் துணைவியார் தெரிவிப்பு

 

பிற தளங்கள்

Tamilworldnews.com

தொழினுட்பம்

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு