(tamilnews Court orders expedition Thajudeen murder investigation)
ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை சம்பந்தமாக விசாரிக்கும் இரகசியப் பொலிஸார், மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கடற்படை வீரர்கள் சிலர் தொடர்பாக விசாரணை செய்வதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோரும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விரிவான முறையில் விசாரணை செய்து கொண்டிருப்பதாக நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்பித்த இரகசியப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கடற்படை வீரர்கள் சிலரின் வரவு பதிவேடு, சுருக்க சமிஞ்ஞைகள் மற்றும் விடுமுறை ஆவணங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2012-01-01 முதல் 2015-08-05 வரையான காலப்பகுதிக்குரிய ஆவணங்களே இவ்வாறு பரிசோதிக்கப்படுவதாக இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, இரகசியப் பொலிஸாரின் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிப்பதற்கு ஜூன் மாதம் 29 ஆம் திகதி வரை நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
(tamilnews Court orders expedition Thajudeen murder investigation)
More Tamil News
- வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! 10 வயது மகள்?
- புதிய தலைவரை நியமித்தார் ஜனாதிபதி
- சூப்பர் ஸ்டைல் கலக்கும் ரஜினியின் மற்றுமொரு படம்..! இன்று இதுதான் வைரல்
- ஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா! பரபரப்பில் இளைஞர்கள்
- பணத்தைத் தவறாகக் கையாண்ட வங்கி ஊழியருக்கு கிடைத்த தண்டனை !!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு வந்த ஆசையை பாருங்க!
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா
- சிங்கப்பூரில் உணவகம் நாசம்: இருவர் கைது
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com