(Kids Favorite Summer Season Masala Lassi Recipe)
தேவையான பொருட்கள் :
* புளித்த தயிர் – 2 கப்
* பால் – ஒரு கப்
* சீரகம் – அரை தேக்கரண்டி
* பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
* மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
* பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை – ஒரு மேசைக்கரண்டி
* உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
* தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
* சீரகத்தை ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.
* மிக்ஸியில் தயிருடன் பால், சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து அடித்து எடுத்துக் கொள்ளவும்.
* அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
* குழந்தைகள் விரும்பும் லெஸி, மசாலா மணத்துடன் தயார்.
<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>
நாவில் எச்சில் ஊற வைக்கும் ஆட்டுக் குடல் குழம்பு
காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்
சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!