திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!

0
653
roma vs liverpool champions league news Tamil 2018

(roma vs liverpool champions league news Tamil 2018)

சம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற லிவர்பூல் அணி 2007ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் ரோமா அணியை வீழ்த்தி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்த லிவர்பூல் அணி, இன்று இரண்டாவது லீக் போட்டியில் களமிறங்கியது.

தங்களது சொந்த மைதானத்தில் லிவர்பூல் அணியை எதிர்கொண்ட ரோமா அணி அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.

முதற்பாதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்திய லிவர்பூல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப்பெற்றது.

லிவர்பூல் அணியின் மனே 9வது நிமிடத்திலும், விஜனால்டம் 25ம் நிமிடத்திலும் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்த, லிவர்பூல் அணியின் மற்றுமொரு வீரரான மில்னர் 15வது நிமிடத்தில் தங்களது கோல் எல்லைக்குள் தானே கோலடித்து எதிரணிக்கு ஒரு கோலை வழங்கினார்.

இதன்படி 1-2 என்ற பின்னடைவுடன் களமிறங்கிய ரோமா அணி தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. ரோமா அணியின் ட்ஷெகோ 52வது நிமிடத்தில் கோலடிக்க, நெயிங்கோலன் 86வது நிமிடத்தில் சிறப்பான கோல் ஒன்றை அடித்ததுடன், 90+4வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக்கி, அணியை 4-2 என வெற்றிபெறச் செய்தார்.

ரோமா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற போதும், முதல் லீக்கில் லிவர்பூல் அணி 5-2 என வெற்றிபெற்றிருந்ததால் அரையிறுதி வாய்ப்பை பெற்றது. லிவர்பூல் அணி 2007ம் ஆண்டுக்கு பின்னர் முதற்தடவையாக சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>