புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா

0
676
Justin Langer named new Head Australia coach

(Justin Langer named new Head Australia coach)

அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜஸ்டின் லாங்கர் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது.

பந்தை சேதப்பத்திய விவகாரத்துக்கு அவுஸ்திரேலிய அணி முகங்கொடுத்ததை தொடர்ந்து, அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட டெரன் லெஹ்மன் தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

பின்னர் அணிக்கான புதிய பயிற்றுவிப்பாளரை நியமிப்பதில் கவனம் செலுத்திய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை, உள்ளூர் அணிகளான மேற்கு அவுஸ்திரேலியா மற்றும் பெர்த் ஸ்கோர்ச்சஸ் அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ஜஸ்டின் லாங்கரை நியமித்துள்ளது.

ஜஸ்டின் லாங்கர் நான்கு வருட ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ளார்.

பந்தை சேதப்பத்திய விவகாரத்தில் சிக்கிய வோர்னர் மற்றும் ஸ்மித்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒரு வருட தடை விதித்ததுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கெமரொன் பென்கிரொப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>