வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்

0
1404
Seized gold jewelry 27 year old youth arrested

(Seized gold jewelry 27 year old youth arrested)
ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த 01 ஆம் திகதி அதிகாலை நகரசபை தலைவரின் மனைவி கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த வேளையில் அவரின் தாலிக் கொடியை நபரொருவர் அறுத்துக்கொண்டு ஓடியுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தாலிக்கொடியை அபகரித்து சென்ற நபரை நேற்று மாலை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவரால் ஐந்து பவுண் பெறுமதியுடைய நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், இதனை ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவுக்கு ஹட்டன் பிரதேசத்திலுள்ள நகைக் கடையொன்றில் அடகு வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பணத்தில் வீட்டுக்கூலி, செலுத்தியிருப்பதாகவும் ஏனைய பணத்தில் ஒரு கையடக்கத் தொலைபேசி கொள்வனவு செய்திருப்பதாகவும் 9000 ரூபா செலவளித்திருப்பதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு களவாடப்பட்ட நகை மற்றும் கையடக்க தொலைபேசி உட்பட 1 இலட்சத்து 16 ஆயிரம் ரூபா பணம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்ததைச் சேர்ந்த ராமன் தினேஸ்குமார் என்ற 27 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபரையும், மீட்கப்பட்ட பணம் மற்றும் நகைகளையும், இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Seized gold jewelry 27 year old youth arrested