அமெரிக்கா, போரில் அனைத்தையும் இழக்கும்- பிரான்ஸ்!

3
1184
France said everyone stand agains America

அமெரிக்க உருக்கு தொடர்பான சுங்கவரிகளிலிருந்து வெளிப்படையான ஐரோப்பிய ஒன்றிய விதிவிலக்குகள் எதுவும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல எனவும் அது வழங்கப்படாவிட்டால் வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது எனவும் பிரான்ஸின் நிதி மந்திரி இன்று தெரிவித்தார். France said everyone stand agains America

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜூன் 1 வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு விதிவிலக்கு வழங்கியுள்ளார், ஆனால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை இன்னும் தெளிவாகக் கூறவில்லை என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்தையும் ஒரு வர்த்தக போரில் இழக்க நேரிடும் என பிரான்ஸின் நிதி மந்திரி ப்ரூனோ லே மயர், பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் தெரிவித்தார்.

“நாங்கள் உறுதியாக நிற்க வேண்டும், ஐக்கிய அமெரிக்காவை எதிர்த்து நிற்க வேண்டும். மொத்தமாக நிரந்தர விலக்கு இருக்க வேண்டும், அதில் எந்த பேச்சு வார்த்தையும் இருக்க கூடாது என்று ஒரே செய்தியை அனைவரும் தெரிவிக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**