மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு

0
2100
Biggest gift husband

(Biggest gift husband illegal love wife)
திருடனை தண்டிக்கச் சென்ற நபருக்கு தண்டனை கிடைத்த சம்பவம் ஒன்று மொனராகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனியார் வகுப்புகள் நடத்தப்படும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர், பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ‘சார் திருடன் ஒருவன் எனது வீட்டிற்குள் நுழைந்துள்ளான், அவனின் ஆடைகள் எனது வீட்டில் உள்ளன. நான் வரும் போது எனது காற்சட்டையை அணிந்துகொண்டு தப்பியோடியுள்ளான்.

அவனின் அடையாள அட்டை மற்றும் பணப்பை என்பன தற்பொழுது என்னிடம் இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இதனைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு புதிராய் இருந்தது. திருட வந்தான் என்றால், ஆடைகளை களைந்து என்ன திருடினான் என பொலிஸ் பொறுப்பதிகாரியால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தந்திரமாக என்ன திருடியுள்ளான் என வினவியபோது, ‘சார் தங்க ஆபாரணங்கள் மற்றும் பணமும் திருடியுள்ளான்’ என்றும் உரிமையாளர் கூறியுள்ளார்.
‘நான் திருடனை கண்டுபிடித்து உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்’ என உரிமையாளரிடம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

பின்னர் திருடனின் தொலைபேசி இலக்கத்தை அறிந்துகொண்ட பொலிஸ் அதிகாரி, திருடனை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

‘சார் நான் உண்மையை உங்களுக்கு சொல்லுகின்றேன்’ என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறைக்கு நுழைந்த ஒரு இளைஞன் ‘சார் இந்த முறைப்பாடு கொடுத்தவரின் மனைவி எனது முன்னாள் காதலி ஆவார்.

அவளை நான் ஒரு நாள் பண்டாரவளையில் வைத்து தற்செயலாக சந்தித்தேன். அவள் தன்னைச் சந்திக்க தனது வீட்டிற்கு வருமாறு கூறி, அவளின் தொலைபேசி இலக்கத்தை கொடுத்தாள்.

நானும் அவள் அழைத்த தினத்தில் சென்றேன். அங்கு இருக்கும் போது அவளின் கணவன் வீட்டுக்கு வந்தான். நான் வெளியே பாய்ந்து தப்பியோடிவிட்டேன். தங்கச் சாமான்களோ பணம் ஒரு சதமோ எடுக்க வில்லை’ எனக் கூறினார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ‘இனிமேல் இந்த பகுதிக்கு தலை காட்டாதே’ என சம்பவம் நடந்த அன்று இவன் கைவிட்டு சென்றிருந்த ஆடைகளையும் கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து, தனியார் நிறுவனத்தின் உரிமையாளரை பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்தபோது, மகிழ்சியோடு ‘சார் திருடனை பிடித்தீர்களா என பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கேட்டுள்ளார்.

‘திருடனைக் கண்டுபிடித்தேன். ஆனால் உமக்கு எதிராக தான் வழக்கு தொடரவுள்ளேன்’ என்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி கூறியுள்ளார். ‘ஏன் ஐயா’ என தனியார் நிறுவன உரிமையாளர் கேட்டுள்ளார்.

‘அவன் ஒன்றும் திருடவில்லை. அவனை வரவழைத்தது உன்னுடைய மனைவிதான். அந்த நேரம் தான் நீர் வீட்டிற்கு வந்துள்ளீர். நான் அவனை இனிமேல் இங்கு வர வேண்டாம் என எச்சரித்துள்ளேன்.

உமது மனைவியை திருத்திக்கொள்ளும். முறைப்பாடு ஒன்று போடும் இருவரையும் அழைத்து இதனை தீர்த்து வைப்போம்’ எனக் கூறியுள்ளார்.

‘ஐயோ வேண்டாம் சார். அவனுக்கு நல்ல பாடம் கற்பிக்கத்தான் அவன் திருடினான் என்று சொன்னேன். கடைசியாக நான் தான் குற்றவாளி. எனது மனைவியை நான் திருத்திக் கொள்கின்றேன்’ எனக் கூறி பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார் எல்லாம் எனக்கு தான் நடக்கின்றது என தனக்குள் கூறிக்கொண்டு.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Biggest gift husband illegal love wife