(first luxury space hotel taking reservations)
இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கிவருகின்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஓரியான் ஸ்பேஸ் நிறுவனம் 2021ம் ஆண்டு விண்வெளியில் அமைக்கப்படும் விடுதியில் தங்க ஆன்லைன் மூலம் முன்பதிவைத் தொடங்கி உள்ளது. குறிப்பாக விண்வெளியில் தங்கி உணவு அருந்துவதற்கான முன்பதிவையே தற்போது தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்க் டாட் காம் (park.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கூறியுள்ள அந்நிறுவனம், விண்வெளியில் தங்க 2 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் முதல் 7 லட்சத்து 90 ஆயிரம் டாலர்கள் வரை கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. விண்வெளிப் பயணம் செல்வோருக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OUR GROUP SITES