அமல் கருணாசேகரவின் விளக்கமறியல் நீடிப்பு

0
597
Rtd. Major General Karunasekara re-remanded

(Rtd. Major General Karunasekara re-remanded)

த நேசன் பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நோயர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி அமல் கருணாசேகரவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் சாந்தனி டயஸ் முன்பாக அமல் கருணாசேகர முன்னிலைப்படுத்தப்பட்டது.

இதன்போதே, எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர சுகயீனம் காரணமாக இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, த நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியரான கீத் நோயார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் உட்பட 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓய்வுபெற் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கடந்த 2006 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமை புரிந்திருந்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி ஊடகவியலாளர் கீத் நோயர் தெஹிவளை பகுதியில் வைத்து கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் தனது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை அடுத்து கீத் நோயார் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியிருந்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Rtd. Major General Karunasekara re-remanded, Rtd. Major General Karunasekara re-remanded