சிங்கப்பூரில் பெருகிவரும் புறாக்கூட்டம்!

0
589

(Pigeons cause difficulty Singapore)

சிங்கப்பூரில் புறாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது, இதற்கு காரணம் அதிக உணவாகும்.

சிங்கப்பூரில் புறாக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு உணவுக் கழிவுகளும் புறாக்களுக்கு உணவளிப்பதும் முக்கிய காரணங்களாகத் திகழ்வதாய் வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

புறாக்களுக்கு உணவு எளிதாகக் கிடைக்கும்போது, இனப் பெருக்கத்திற்கு அதிகப்படுத்துகிறது. அதன் மூலம் புறாக்களால் ஏற்படும் தொந்திரவுகளும் அதிகரிக்கின்றன.

ஆகவே, புறாக்களுக்கு உணவளித்தால் 500 வெள்ளி வரை அபராதம் செலுத்தவேண்டும். அதோடு 2016ஆம் ஆண்டு 130 பேர் புறாக்களுக்கு உணவளித்ததற்காகப் பிடிபட்டனர், கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 218ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாண்டு மார்ச் 20ஆம் தேதி வரை, 93 பேர் அதற்காகப் பிடிபட்டுள்ளனர்  ,இந்த நிலைமையைக் கண்காணிக்க ஆணையம் சுமார் 100 கேமராக்களைப் பொருத்தியுள்ளது.

மேலும் ,அதன் மூலம் புறாக்களுக்குத் தொடர்ந்து உணவு வழங்குவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்  மற்றும்,  அவர்களுக்குக்  கடுமையான  தண்டனைகள்  விதிக்கப்படும்  என ஆணையம் தெரிவித்துள்ளது.

tags:-Pigeons cause difficulty Singapore

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**