ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்

0
1051
Eelam biggest media assassination commemorated Jaffna

(Eelam biggest media assassination commemorated Jaffna)
ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை இடம்பெற்ற மே 2 ஆம் திகதியான இன்று ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்த தினத்தை முன்னிட்டு உதயன் பத்திரிகையின் ஏற்பாட்டில் ஊடக சுதந்திரத்துக்கான வேட்கை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

உதயன் பத்திரிகை நிறுவனம் மீதான தாக்குதல் மற்றும் படுகொலை இடம்பெற்ற மே 2 ஆம் திகதி ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியே சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், யுத்த காலத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உதயன் குழுமத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணபவன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், ஊடகவியலாளர், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

அத்துடன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஷரீன் சரூர், யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் கே.ரி. கணேசலிங்கம் ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரனின் சிறப்புரை நடைபெற்று வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Eelam biggest media assassination commemorated Jaffna