முரளிக்கு எதிராக கொதித்தெழுந்த தயாசிறி ஜயசேகர! : காரணம்?

0
1280
muttiah muralitharan vs dayasiri jayasekara fight news Tamil

(muttiah muralitharan vs dayasiri jayasekara fight news Tamil)

இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகள்தான் காரணம் என முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளமைக்கு தயாசிறி ஜயசேகர கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் இலங்கை கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளின் தலையீடு முக்கிய காரணம் என இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முரளி வெளியிட்டுள்ள இந்த கருத்து இலங்கையை மோசமாக சித்தரிப்பது போன்று அமைந்துள்ளதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“இலங்கை கிரிக்கெட்டுடன் அரசியல்வாதிகள் இணைந்து செயற்படுகின்றமை புதிய விடயம் அல்ல. அரசியல்வதிகளுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது.
இலங்கையின் பல கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களாக அரசியல்வாதிகள் இதுவரை செயற்பட்டு வருகின்றனர்.

நான் விளையாட்டுத்துறை அமைச்சராக இல்லாதபோதும், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவேன்.

முரளியின் பந்து வீச்சு ஐசிசி விதிமுறைக்கு மாறாக இருப்பதாக அவுஸ்திரேலிய நடுவர்கள் குற்றச்சாட்டிய போதும், முரளிக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் செயற்பட்டுள்ளனர். எனினும் இப்படியொரு கருத்தை இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டு நாட்டை மோசமாக சித்தரித்துள்ளார்.

இவ்வாறு கருத்து வெளியிட வேண்டுமானால் இலங்கை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருக்க வேண்டும். இதனை முழுமையாக நான் கண்டிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

<<Tamil News Group websites>>