கருணாவை கூட்டி கொடுத்த மௌலானாவுக்கு ரணிலின் பரிசு!

19
2897
Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position

(Seyed Ali Zahir Moulana Gets Deputy Minister Position)

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து அவர்களின் முக்கிய உறுப்பினரான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முரளிதரனை அப்புறப்படுத்தி அவரை இலங்கை அரசாங்கத்தின் அடிவருடியாக மாற்றும் முயற்சியில் பெரும் பங்காற்றியவர் அலிசாஹிர் மௌலானா என்பது உலகறிந்த விடயம்.

முரளிதரனின் பாடசாலை காலத்து நண்பராகிய அலிசாஹிர் மௌலானா இந்த பிரிப்பு வேலையில் ஈடுபட்ட பின்னர் , தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டு அவர்களின் போராட்டபாதை பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தது.

Photo : The Hindu

சிறிது சிறிதாக வளர்த்து எடுக்கப்பட்ட போராட்டம் ஒரே நாளில் பின்னடைவை சந்திக்க கருணாவின் கூட்டு துரோகம் பாரிய அளவில் பங்களிப்பு செய்திருந்தது.

அப்போதைய ரணில் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கு அலிசாஹிர் மௌலானா கூட்டி கொடுத்த அரும் செயலுக்குரிய பலனை தற்போது ரணில் அரசு வழங்கியுள்ளது.

ஆம்! இந்த நீண்ட கால இடைவெளியில் , அலிசாஹிர் மௌலானாவின் கூட்டி கொடுப்புக்கு பரிசாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Photo : Flickr

சக சிறுபான்மை இனமொன்றின் இரத்தம் சிந்தி வளர்க்கப்பட்ட போராட்டத்தை சிதைத்து , சிங்கள இனவாத அரசின் அடிவருடியாக செயற்பட்ட அலிசாஹிர் மௌலானாவுக்கு இது அரியவொரு பரிசே.

ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

 

பிற தளங்கள்

Tamilworldnews.com

தொழினுட்பம்

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு