புலம்பெயர் தமிழ் மக்களே எமது தாயகம் காக்க முன்வாருங்கள்! அவசர வேண்டுகோள்!

0
772
Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences

(Foreign Living Tamil People Urges Apply Mahavali Zone Residences)

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி வலய விஸ்தரிப்பு காரணமாக பறிபோக இருக்கும் எமது தாயக பிரதேசங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக நாம் செய்திகளை பிரசுரித்து வருகின்றோம்.

அந்த வகையில், மகாவலி வலய விஸ்தரிப்பு திட்டத்தில் சிங்களவர்களை உள்வாங்கும் ஆபத்தில் இருந்து எமது பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கில் அவசர அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன் படி முல்லைத்தீவு மாவட்டத்தின் மகாவலி வலய குடியிருப்புகளில் குடியேற விண்ணப்பிக்கும் நடவடிக்கையில் தமிழ் மக்களை ஈடுபடுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் , யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் பல பிரதேசங்கள் திட்டமிட்ட முறையில் எமது பூர்விக நிலப்பரப்புகள் அபகரிப்பு செய்யப்பட்டது.

தற்போது அதன் தொடர்ச்சியாக , மகாவலி வலய விஸ்தரிப்பு எமது தாயக நிலப்பரப்புகளை எமது கைகளில் இருந்து பறித்து சிங்கள பேரினவாதிகளின் கைகளில் கொடுக்கும் முகமாக மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ஆபத்துக்கு கைகொடுக்கும் வண்ணம் , எமது நிலப்பரப்புகளை சொந்தம் கொண்டாட வேண்டிய தமிழ் மக்கள் புலம்பெயர் தமிழர்களாக வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். மகாவலி வலைய குடியேற்றங்களில் சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களே விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

இந்த அபாய நிலையை தணிக்கும் முகமாக , புலம்பெயர் தமிழ் மக்கள் உடனடியாக மகாவலி திட்டத்தில் குடியேறும் விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஆராய்ந்து , பொருத்தமான முறையில் விண்ணப்பங்களை உடனடியாக சமர்பிக்கும் நடவடிக்கைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் துணை புரிய முன்வரவேண்டும் என நெற்றிக்கண் செய்தி பிரிவு அவசரமாக வேண்டுகோள் விடுக்கின்றது.

ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

கழுத்து வெட்டி பிரிகேடியரும் நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு சொல்லி இருக்கும் செய்தி என்ன?

 

பிற தளங்கள்

Tamilworldnews.com

தொழினுட்பம்

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு