பொன்சேகா காட்டுக்கு சென்றால் விலங்குகள் பயந்து ஓடும் : மஹிந்த கூறும் புது கதை

0
783
tamilnews mahinda rajpaksha confirms end day gorvenment

(sarath fonseka new ministry post mahinda rajapaksa comment)
வனவிலங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் பொன்சோகா காட்டுக்கு வருகிறார் என வன விலங்குகள் கேள்விப்பட்டால் அனைத்தும் பயந்து பாய்ந்து ஓடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட அமைச்சு பதவி தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அமைச்சரவை மாற்றத்தின் போது, சரத் பொன்சேகாவுக்கு மாத்திரமே உயிரியல் விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைச்சுப் பதவி சரியாக வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை “சரத் பொன்சேகாவை புனுகுப் பூனை என்று அழைப்பதுண்டு. அவருக்கு அமைச்சரவை மாற்றத்தின் மூலம், வன வாழ் உயிரினங்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்குப் பொருத்தமான அமைச்சுத் தான் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிண்டலடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி குறித்து திருப்தியடைந்துள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

”முன்னரை விட இப்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நீடிக்கும், யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு தீர்வு காண முயற்சிப்பேன்.

முன்னைய அமைச்சின் மூலம், ஒதுக்கப்பட்ட நிதியை அடிமட்ட மக்களுக்கு பயன்படுத்தினேன்.

புதிய அமைச்சின் மூலம் கிராமப்புற மக்களுக்கு, பணியாற்ற முடியும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டம், ஒழுங்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:sarath fonseka new ministry post mahinda rajapaksa comment,sarath fonseka new ministry post mahinda rajapaksa comment