{ 2018 election final war }
மலேசியாவில், பல ஆண்டுகளாக துன் மகாதீர் முகமட் மற்றும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்த்து போட்டியிட்ட லிம் கிட் சியாங், இம்முறை, அவ்விருவருடன் கூட்டணி அமைத்து தேர்தல் முன்னணியை எதிர்த்து போட்டியிடவிருக்கின்றார்.
இந்த 14-ஆவது பொதுத் தேர்தல் தமக்கும், தனது இரு ‘கூட்டாளிகளுக்கும்’ இது இறுதி ‘போராக’ அமையக் கூடும் என்று ஜசெக கட்சியின் மூத்தத் தலைவரான கிட் சியாங் கூறியுள்ளார்.
“எனக்கு 77 வயதாகின்றது நான் கடந்த 12 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றேன். இதுவே நான் போட்டியிடும் கடைசி பொதுத் தேர்தலாகும். மகாதீருக்கும் 93 வயதாகின்றது. 2023-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அவர் ஒரு கூட்டணியை வழி நடத்துவார் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது” என்று கிட் சியாங் கூறியுள்ளார்.
ஜூன் மாதம் 8-ஆம் திகதியன்று சிறையிலிருந்து விடுதலையாகும் அன்வாருக்கு இன்னும் 4 மாதங்களில் 71 வயதாகின்றது.
“மே மாதம் 9-ஆம் திகதியன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைக்காவிடில், நாட்டின் 8-ஆவது பிரதமராக அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்க முடியாது. அதனைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தலில் அவர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வழி நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்” என்று கிட் சியாங் கருத்துரைத்துள்ளார்.
நாட்டில் மாற்றத்தை கொண்டு வர இப்போது இந்தத் தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். பக்காத்தானுக்கு மக்கள் வாக்களித்தால் மட்டுமே, நாட்டில் மாற்றம் நிகழும். மலாய்க்காரர்களின் ஆதரவு பக்காத்தானுக்கு இருந்தாலும், புத்ராஜெயாவை கைப்பற்றும் அளவில் அந்த ஆதரவு இல்லை என்று கிட் சியாங் கூறியுள்ளார்.
இருப்பினும், எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் பொதுத் தேர்தலின் போது நடைபெறும். அவ்வகையில் இம்முறை பக்காத்தானுக்கு வாக்குகள் அதிகம் பெறப்பட்டு, அவர்கள் வெற்றி பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags: 2018 election final war
<<MOST RELATED CINEMA NEWS>>
*டாக்டர் ஶ்ரீராம் விவகாரம்: வாக்குகளுக்காக எதிர்க்கட்சி நாடகம்..!
*தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!
*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!
*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!
*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!
*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?
*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு
*தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?
<<Tamil News Groups Websites>>