திருகோணமலை காட்டுக்குள் புலிகளின் சீருடைகள், வெடிப்பொருட்கள் மீட்பு : சுற்றிவளைத்த பொலிஸார்!

0
2990
Ltte uniform weapons recovered trincomalee forest

(Ltte uniform weapons recovered trincomalee forest)
திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலிக்கண்டி குளம் பகுதியிலுள்ள காட்டுக்குள் விடுதலைப் புலிகளின் சீருடைகளுடன் வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுக்குள் விறகு எடுப்பதற்காகச் சென்ற நபர்கள் வழங்கிய தகவலையடுத்து, இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை இரண்டு உட்பட 16 வெடிபொருட்கள், பெரிய பெட்ரி சாஜர், மல்டி பிளக், 4 அடி நீளமான கோட் வயர் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Ltte uniform weapons recovered trincomalee forest, Ltte uniform weapons recovered trincomalee forest