ஆப்கானிஸ்தான் இரட்டைக்குண்டு தாக்குதலுக்கு இலங்கை கண்டனம்

0
702
tamilnews Sri Lanka condemns suicide bomb attack Afghanistan

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதலில், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வாழ்த்துவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

காபூலில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட, 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :