வறட்சியினால் 6 இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிப்பு

0
4883
5 lakh People still affected Sri Lanka drought tamil news

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 6 இலட்சத்துக்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டம் அதிகளவில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

வறட்சி காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 1 இலட்சத்து 2 ஆயிரத்து 163 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 314 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :