ஆப்கானிஸ்தான் குண்டுத்தாக்குதலில் 8 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 29 பேர் உயிரிழப்பு

0
715
Multiple Suicide Bombings Afghanistan killed least 29 people

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதலாவது குண்டுத் தாக்குதல் உள்ளுர் நேரப்படி நேற்று காலை 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக குறித்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :