வாழைச்சேனை விபத்தில் வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட மூவர் காயம்

0
694
foreign citizen including Three people injured Valaichchenai accident

வாழைச்சேனை கறுவாக்கேணி பாடசாலை வீதியில் ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டு பிரஜை உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த எகிப்து நாட்டவர் உள்ளிட்ட மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீராவோடையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், சுங்கான்கேணியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் என்பவையே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, மூதூர் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :