சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு

0
766
reporting illegal Drug abuse sales srilanka tamilnews

 

வெசாக் காலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் மற்றும் போதைபொருள் பயன்படுத்துபவர்களை கண்டறிய இதுவரை 439 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மதுவரி திணைக்கள அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் மதுபானத்தை வைத்திருந்த மற்றும் கொண்டுச்சென்ற 227 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை விற்பனை செய்த 90 இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அந்த திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, பிரச்சித்தமான இடங்களில் புகைத்தல் மற்றும் புகைத்தல் பொருட்களை விற்பனை செய்தல் தொடர்பில் 25 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :