பனங்கூடலுக்கு தீ வைப்பு – குடியிருப்பாளர் பாதிப்பு

0
5771
tamilnews jaffna panai estate fire neighbor filed case

(tamilnews jaffna panai estate fire neighbor filed case)

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்ணாகம் கிராமத்தில் பனங்கூடலுக்கு அதன் உரிமையாளர் தீ வைத்ததால் அருகாமையிலிருந்த குடியிருப்பாளர் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு தீ விபத்து ஏற்படுத்தும் வகையில் பனங்கூடலுக்கு தீ வைக்கப்பட்டதாக அந்த குடியிருப்பாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பனங்கூடலுக்கு நேற்று (29) மாலை 4 மணிக்கு தீவைத்தார். அதனால் 8 பனைகள் தீயால் எரிந்துள்ளன.

அவரால் இன்று (30) திங்கட்கிழமை மாலை மீளவும் பனை ஓலைகள் போட்டு அந்தப் பகுதியில் எரியூட்டப்பட்டன.

அதனால் எனது வீடு முழுவதும் புகை மண்டலமாக உள்ளது” என்று குடியிருப்பாளர் தெரிவித்தார்.

கற்பக தருவான பனை மரத்தை அழிக்கும் வகையில் அவற்றுக்கு தீ வைக்கப்பட்டது என்ற அடிப்படையில் பனை அபிவிருத்தி சபையும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளது.

“பனங்கூடல் உரிமையாளருக்கும் அதன் அருகே உள்ள குடியிருப்பாளருக்கும் இடையே முரண்பாடு உள்ளது.

அதன் வெளிப்பாடாகவே பனங்கூடலுக்கு அதன் உரிமையாளரே தீயை மூட்டி அருகிலுள்ள குடியிருப்பாளருக்கு அச்சத்தையும் – இடையூறையும் ஏற்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

(tamilnews jaffna panai estate fire neighbor filed case)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :