ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும்

0
527
Ranil attend Sixth International Urban Conference Singapore

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேயவர்த்ன குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக கட்சியின் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், ஹரின் பெர்ணான்டோ, ஹர்ச டி சில்வா மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோர் கட்சியின் சுமையை பொறுப்பேற்பதற்கு புதிதாக இணைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தலைவர்களை உருவாக்கும் நோக்கில் அதற்கான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவர்கள் பிரதித் தலைவர் மற்றும் உப தலைவருடன் இணைந்து புதிய பிரவேசத்துடன் வெற்றிப்பாதை நோக்கி பயணிப்பதற்கான அடித்தளம் இடப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here