(tamilnews jaffna sward attack incident Switzerland workout)
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீதான தாக்குதல் சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் தரப்பு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. .
இன்றைய தினம் (30) கொக்குவில் பகுதியில் நடன ஆசிரியர் மற்றும் அவரது தாய் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸார் தாக்குதல்தாரிகளின் இலக்கு தவறியுள்ளதாகவும் அவர்கள் தாக்க வந்த இலக்கு நடன ஆசிரியரின் தங்கை எனவும் குறிப்பிட்டனர்.
சம்பவம் நடைபெற்ற போது நடன ஆசிரியரின் தங்கை வீட்டில் இருந்துள்ளார்.
எனினும் தாக்குதல் இடம்பெற்ற போது தன்னை சுதாகரித்துக் கொண்டு அறை ஒன்றில் ஒளிந்து கொண்டதாக விசாரணையின் போது அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு சுவிஸ் நாட்டில் உள்ள தனது கணவரின் முதலாவது வயது கூடிய மனைவி தான் காரணம் எனவும் சில தினங்களுக்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமண முறிவு பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு அவர் அச்சுறுத்தினார்.
இதனால் நான் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது எனது கணவரின் வேண்டுகோளின் படி சமாதானமாக சென்றதாகவும் மீண்டும் திடீரென இவ்வாறு சுவிஸ் நாட்டு பெண் தன்னை தாக்குவதற்கு கூலிக்கு ஆட்களை அமர்த்தி தன்னை கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறினார்.
குறித்த சம்பவத்திற்கு அச்சுவேலியை பிறப்பிடமாக கொண்ட 32 வயதுடைய இளைஞர் ஒருவரே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சுவிஸ் நாட்டில் உள்ள வயது கூடிய பெண் ஒருவரை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திருமணம் முடித்துள்ள அதே வேளை இலங்கைக்கு விடுமுறைக்கு வந்த போது கொக்குவிலில் உள்ள நடன ஆசிரியரின் தங்கை மீது ஆசை கொண்டு சுவிஸ் நாட்டில் உள்ள தனது மனைவிற்கு தெரியாமல் மறுமணம் புரிந்துள்ளார்.
இந்த விடயம் தற்போது முதலாவது மனைவிற்கு தெரியவந்ததை அடுத்து பிரச்சினை விகாரமடைந்து தற்போது வாள் வெட்டுச்சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த நாகராசா லீலா(வயது50) தாய் நடன ஆசிரியையான 34 வயதுடைய நாகராசா யாளினி ஆகியோர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(tamilnews jaffna sward attack incident Switzerland workout)
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்