இணையத்தளங்கள் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம்

2
1229
srilankan people cheat Internet Warning Customs Department

இணையத்தளங்கள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுங்க திணைக்கள ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக இலங்கையர்கள் பலரை ஏமாற்றி பணம் பெற்றுக்கொள்ளும் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது.

பல்வேறு பிரபல வர்த்தக நாமங்களை கொண்ட சர்வதேச நிறுவனங்களினால் நடத்தப்பட்ட போட்டியின் பின்னர் பரிசு கிடைத்துள்ளதாக தெரிவித்து இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த பரிசினை இலங்கைக்கு அனுப்பி அதனை சுங்க பிரிவில் விடுவித்து கொள்வதற்கு தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறி பணம் மோசடி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், இதுதொடர்பில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :