மாகாண சபை தேர்தல் தாமதமாகுமா…?

0
644
province election delay Lankan border decision late criticized

province election delay Lankan border decision late criticized
மாகாண சபை தேர்தல் தாமதமடைவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பான நாடாளுமன்று மீளாய்வு குழு அமைக்கப்பட வேண்டி ஏற்பட்டுள்ளதால், மாகாண சபைத் தேர்தல் தாமதமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு திருத்தப்பட்ட 17 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்திற்கு அமைய, மீளாய்வு குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை, இரண்டு வார காலப்பகுதியினுள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற வேண்டும்.

இந்த நிலையில், நிறைவு செய்யப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கை கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏற்கனவே குறித்த காலவரையறைக்குள் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படாத நிலையில், சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையிலான ஐந்து உறுப்பினர்களை கொண்ட புதிய மீளாய்வு குழுவொன்றை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்த நடைமுறையை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களை காலவரையின்றி பிற்போட வேண்டிய நிலை ஏற்படலாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

province election delay Lankan border decision late criticized

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

province election delay Lankan border decision late criticized