அமைதியும் சமாதானமும் நிலவ வண்டும்

0
582
peace unique respect religion minister thigambaram latest news Lankan

peace unique respect religion minister thigambaram latest news Lankan
மக்கள் மத்தியில் அமைதியும் சமாதானமும் நிலவ வண்டும் என்று அகிம்சையைப் போதித்த கௌதம புத்தரின் வழியில் எமது நாடு சுபிட்சம் காண வேண்டும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள வெசாக் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்இ ஆசையே துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் என்று புத்த பகவான் போத்திதார். மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அரிய பல தத்துவங்களை முன்வைத்து நல்வழிப் படுத்திய அந்த புண்ணிய சீலன் வகுத்த பஞ்சசீலக் கொள்கையை பின்பற்றுவதன் ஊடாக நாட்டில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொண்டு அழிக்க நினைப்பதும்இ அமைதியைக் குலைப்பதும் பௌத்த தர்மத்துக்கே இழுக்கான செயலாகும்.

நாடு நலம் பெற வேண்டுமானால் எமது மத்தியில் காணப்படும் குரோதங்கள் நீங்க வேண்டும். தாம் மட்டுமே சகல சௌகரியங்களையும் சௌபாக்கியங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற சுயநலம் மறைய வேண்டும். எல்லோரும் இன்புற்றிருக்க எம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும். நாட்டில் வன்முறை கலாசாரத்தை ஒழித்து இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்த்தெடுக்க வேண்டும். அதுவே உண்மையான பெளத்தமதக் கோட்பாடாகும்.

இலங்கை மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக சீரும் சிறப்பும் பெற்று வாழ வெசாக தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
peace unique respect religion minister thigambaram latest news Lankan

More Time Tamil News Today

Time Tamil News Group websites :