அரசாங்கம் பின் நிற்காது

0
568
president festival news wish country people latest tamil news

president festival news wish country people latest tamil news

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெசாக் தினத்தை முன்னிட்டுவெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் பின் நிற்காது – ஜனாதிபதி

எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின் நிற்காது என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இன்று (28) பிற்பகல் குருணாகலை பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2562 ஆவது ஸ்ரீ புத்த வருட அரச வெசாக் விழா ஆன்மீக அபிவிருத்திக்கு முன்னுரிமையளித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று பிங்கிரிய தேவகிரி ரஜ மகா விகாரையில் நடைபெற்றது.

தான் இதற்கு முன்னரும் குறிப்பிட்டுள்ளவாறு அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றபோது அனைத்து சந்தர்ப்பங்களிலும் மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களின்படியே செயற்படுவதாகவும் அவர்களது ஆலோசனைகளுக்கு புறம்பாக எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என்றும் இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததார்.

நாட்டில் நிலவுகின்ற சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து தெளிவுடன் செயற்படுவோமேயானால் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு சமய தத்துவங்களின் மூலம் கிடைக்கும் வழிகாட்டல்களைப்போன்று வேறு எந்தவொரு வழிகாட்டலும் கிடையாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பௌத்த சாசனத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் என்ற வகையில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புக்களையும் குறைவின்றி நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரச வெசாக் விழாவை முன்னிட்டு விசேட தபால் முத்திரை ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

குருணாகல் மாவட்டத்தில் உள்ள விகாரைகள் மற்றும் சமய பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியை வழங்கி வைக்கும் முகமாக அவற்றுக்கான ஆவணங்கள் ஜனாதிபதி அவர்களினால் கையளிக்கப்பட்டன.

கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமேயின் அனுசரணையில் மாவட்டத்தில் உள்ள சமய பாடசாலைகளில் உள்ள பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.
பிங்கிரிய தேவகிரி ரஜ மகா விகாராதிபதி சங்கைக்குரிய மலங்கனே அத்ததஸ்சி நாயக்க தேரரினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது. பிங்கிரிய தேவகிரி ரஜ மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நுழைவாயிலும் ஜனாதிபதி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரும் புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்களும் பெருமளவான மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.04.28
president festival news wish country people latest tamil news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :