அரச வெசாக் பண்டிகை நாளை குருநாகலில்

0
937
Vesak Festive Day Tomorrow Kurunegala tamil news

(Vesak Festive Day Tomorrow Kurunegala tamil news)

வெசாக் பண்டிகையினை முன்னிட்டு இந்தியாவில் இருந்து புத்தபெருமானின் புனித பொருட்கள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இந்தியாவின் சாரணாத்தில் இருந்து கொண்டுவரப்படும் புனிதப் பொருட்கள் நாளை மறுதினம் முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை அலரி மாளிகையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

இதற்குரிய நடவடிக்கைகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ளது.

சாரணாத் புனித பொருட்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரச வெசாக் பண்டிகை நாளை குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதேவேளை, வெசாக் பண்டிகை தொடர்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் மாத்திரம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

(Vesak Festive Day Tomorrow Kurunegala tamil news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :