அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கையில் பாதுகாப்பு எச்சரிக்கை!

0
767
Security alert Sri Lanka US citizens tamil local news

(Security alert Sri Lanka US citizens tamil local news)

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள மே தின பேரணிகள் தொடர்பில் அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி முதல் 7ஆம் திகதிவரை இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மே தின ஊர்வலங்களை பல பகுதியில் நடத்தவுள்ளமையினையும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் மட்டக்களப்பில் மே தின பேரணிகள் முன்னெடுக்கபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் ஏனைய இடங்களிலும் பேரணிகள் நடைபெறலாம் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த காலப்பகுதியில் வீதிகள் மூடப்படுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமைதியான பேரணிகள் பின்னர் மோதல் மற்றும் வன்முறையாக மாற்றமடையலாம் என்பதால் இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அத்துடன், மே தின பேரணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லுதல் மற்றும் பாரியளவிலான ஒன்றுகூடல், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

மேலும், நாட்டின் சூழ்நிலைகளை அறிந்துகொள்ள உள்ளுர் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை கண்காணிக்குமாறும் அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

(Security alert Sri Lanka US citizens tamil local news)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :