நாடாளுமன்ற மீளமர்வு தொடர்பில் புதிய வர்த்தமானி

0
701
Gazette notification issued relating opening next Parliamentary session

(Gazette notification issued relating opening next Parliamentary session)

நாடாளுமன்ற மீளமர்வு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சீர்செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள அதிபர் கங்காணி லியனகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்து புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 12ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது குறித்த வர்த்தமானி அறிவித்தலை சீர்செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

(Gazette notification issued relating opening next Parliamentary session)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :