இலங்கையில் புதுவித போதைப்பொருள் : வெளிநாட்டவர் உட்பட 3 பேர் கைது

0
871
Three arrested with the Black Mendi Narcotic

Three arrested with the Black Mendi Narcotic

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்த வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை பகுதியில் இடம்பெற்ற திடீர் சோதனையின் பொது குறித்த வெளிநாட்டு பிரஜை கைவசம் வைத்திருந்த புதுவகை போதை பொருளை கைப்பற்றியுள்ளனர்.

அதுமட்டுமன்றி இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு இலங்கையர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், 36 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர் என்றும் அவரிடம் இருந்து சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான பிளாக் மெண்டி என்ற போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதைப்பொருள் ஒரு சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட அவுஸ்திரேலியா பிரஜை இரகசியமாக போதைப்பொருளை கொண்டுவந்து இந்த விற்பனையில் ஈடுபட்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை இன்று தங்காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

More Time Tamil News

Time Tamil News Group websites :