இரவில் கண் விழித்தால் விரைவில் மரணமா? திடுக்கிடும் தகவல்

0
872
Late Night Sleep Soon Death Health Tips, Late Night Sleep Soon Death Health, Late Night Sleep Soon Death, Late Night Sleep Soon, Late Night Sleep

(Late Night Sleep Soon Death Health Tips)

சமீப காலமாக இரவில் பெரும்பாலான இளைஞர்கள் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், அவர்களுக்கு இருக்கும் பணிச்சூழலும் இரவில் தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘குரோனோபயாலஜி இன்டர்நேஷனல்’ என்ற பத்திரிக்கை சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

5 லட்சம் பேரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில் இரவு தூங்காமல் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்பவர்கள், பகலில் வேலை செய்பவர்களை விட நோய்களினாலும், உடல்நலக்குறைவினாலும் பாதிப்படைந்தவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், பகலில் வேலை செய்பவர்களை விட இரவில் விழித்திருந்து வேலை செய்பவர்கள் இளவயதிலேயே மரணிப்பதற்கு 10 சதவீதம் அதிக வாய்ப்பிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ‘குரோனோபயாலஜி இன்டர்நேஷனல்’ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் கிரிஸ்டன் தெரிவித்ததாவது,

‘மனித உடலின் இயக்கம் பயலாஜிகல் கிளாக்கின் படி செயல்படும். இந்த நேரம் தூங்கவேண்டும், இந்த நேரம் சாப்பிட வேண்டும் என நம் உடல் பிரத்யேகமாக முடிவு செய்து அதன்படி செயல்படும். இதனை பயலாஜிகல் கிளாக் என்பர்.

இந்த வரிசை மாறும் போது மனிதர்க்கு உடலளவிலும் மன அளவிலும் பிரச்னைகள் ஏற்படுகிறது’ என்றார்.

<<தமிழ் ஹெல்த் தளத்தில் அதிகமாக வாசிக்கப்பட்ட செய்திகள்>>
 சிறுநீரகக் கல் பிரச்சினை இவங்களுக்கெல்லாம் வரும்; கவனமா இருங்க…!

பக்கவாதம், புற்றுநோய் வராமல் இருக்க இதை தவறாமல் செய்ங்க…!

தலையில் சொட்டை விழாமல் இருக்க இதை சாப்பிட்டு பாருங்க..!

<<TAMIL NEWS GROUP SITES>>
https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/

 Web Title : Late Night Sleep Soon Death Health Tips