கொழும்பில் ஆடம்பர விருந்து : சிக்கினார் வீரவன்ச

0
981
wimal weerawansa given luxury dinner

(wimal weerawansa given luxury dinner)
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அண்மையில் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திகளைப் பெற்றார். இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் விமல் வீரவன்வன்ச இந்த ஆடம்பர விருந்தை ஏற்பாடு செய்துள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விருந்தில் 800க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

விருந்தில் கலந்துகொண்டவர்களின் உணவுக்கு மாத்திரம் 53 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை செலவிட்டுள்ளார்.
இதற்கு மேலான ஏனைய செலவுகள் செய்யப்பட்டுள்ளன.

விருந்துபசாரம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின்னர்(14) கதிர்காமம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்திக்கடனும் செய்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச பாடசாலை கல்வியினை நிறைவு செய்யவில்லை என்று அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் கல்வியினை நிறைவு செய்யவில்லையாயின் அதனை நிரூபிக்குமாறும் கூறியிருந்தார்.

அத்துடன், அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தாம் அரசியல் வாழ்க்கையை துறந்து செல்வதாகவும் அண்மையில் நாடாளுமன்றில் இடம்பெற்ற அமர்வொன்றின் போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், விமல் வீரவன்ச சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சம்பவங்களை பார்வையுற்றும் உள ரீதியாக பாதிக்கப்பட்ட அவரது மகள் சாதாரண பரீட்சைக்கு தோற்றி அதிசித்திகளைப் பெற்றமைக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

Tags:wimal weerawansa given luxury dinner,wimal weerawansa given luxury dinner