இந்தியாவின் முதல் பிரதமர் மோடியா???- வெடித்தது சர்ச்சை

0
707
google change search results prime minister modi

இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்று கூகுளில் தேடினால் தற்போதைய பிரதமர் மோடியின் புகைப்படம் வந்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் முழுக்க வைரல் ஆனது. எல்லா தகவலும் கிடைக்கும் இணைய உலகத்திலேயே இப்படி மோசடி நடந்து இருப்பது கஷ்டம் அளிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.google change search results prime minister modi
கூகுளில் மோடியின் புகைப்படம் தேடும் போது விக்கிபீடியா கூகுளிடம் அளிக்கும் தேடுதல் விடையில் முதல் பிரதமர் என்பதில் சரியாக நேரு என்ற பெயர் இருக்கிறது. ஆனால், நேருவின் புகைப்படத்திற்கு பதில் மோடியின் புகைப்படம் இருப்பதுதான் பிரச்சினை.

இதனால் இந்தியாவின் முதல் பிரதமர் இவர்தான் என்று விக்கிபீடியா சொல்கிறதா என்று எல்லோரும் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் பிரதமர் மட்டுமில்லாமல் மற்ற தலைவர்களின் புகைப்படமும் தவறாக வந்தது. முதல் நிதி அமைச்சர் யார் என்றால் அருண் ஜெட்லி புகைப்படமும், முதல் பாதுகாப்பு துறை அமைச்சருக்கு நிர்மலா சீதாராமன் புகைப்படமும் வந்தது.

இதற்கு காரணம் கூகுளின் Algorithm தான். நாம் தேடும் விஷயத்திற்கான பதிலைத்தான் விக்கிபீடியாவில் இருந்து எடுத்து கொடுக்கும். ஆனால் பிரதமர் இடத்தில் விக்கிபீடியா கடைசியாக மோடியின் புகைப்படத்தைத்தான் வைத்திருக்கும். ஆகவே கூகுள் இந்த புகைப்படத்தைதான் வெளியே காட்டியிருக்கிறது. இது கூகுள், விக்கிபீடியா இருவரின் Algorithm காரணமாக வந்த பிரச்சனை ஆகும்.

இதற்கு எதிராக பலர் குரல் கொடுத்திருந்தனர். இதனால், தற்போது கூகுள் இந்த முடிவுகளை மாற்றி இருக்கிறது. முதல் பிரதமர் நேருதான் என்று சரி செய்து சரியான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. அதை போல மற்ற அரசியல் தலைவர்களின் புகைப்படத்தையும் சரியாய் மாற்றி இருக்கிறது.

<<MOST RELATED NEWS>>

**Tamil News Groups Websites**