2 year girl dies biting street dogs uttar pradesh
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில், 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2 வயது சிறுமி, சிறுவர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய்கள் சிறுமியையும், அவருடன் விளையாடிய மற்றொரு சிறுவனையும் கடித்து குதறியுள்ளன.
மேலும் சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள், படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More Tamil News
- இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் – இருவர் படுகொலை!
- பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை பெற்றோர் எரித்துக் கொலை!
- சென்னை மெட்ரோ ரயிலில் 4 நாட்களாக தொடர்ந்து இலவச பயணம்!
- ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பு – மு.க.ஸ்டாலின்!
- ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை வெளியிட்டது – தமிழக அரசு!