இலங்கை கிரிக்கட் அணிக்கு பயன்பட கூடிய வகையிலேயே இலங்கையில் கிரிக்கட் மைதானம் வடிவமைக்கப்படும் என இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. international cricket stadium rules dhayasiri jayasekara
இலங்கை கிரிக்கட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ளப்பட்டதாக அல் ஜசீரா தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதன் உப தலைவர் மொஹான் டி சில்வா இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , தமது நாட்டுக்கு ஏற்றவாறு மைதானத்தின் ஆடுகளத்தை வடிவமைத்துக்கொள்ள முடியாது என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
கடந்த தினத்தில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவினால் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
அதனூடாக, இலங்கை தேசிய அணியில் பிரதிநிதித்துவப்படுத்திய வீரரான தில்ஹார லொக்குஹெட்டிகே , ஜீவன்த குலதுங்க, காலி சர்வதேச மைதானத்தின் உதவி முகாமையாளரொருவர் மற்றும் தரிந்து மெந்திஸ் என்ற பயிற்சியாளரும் இவ்வாறு ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஆட்ட நிர்ணயத்தில் தாம் ஈடுபடவில்லை என முன்னாள் கிரிக்கட் வீரர் தில்ஹார லொகுஹெட்டி மற்றும் ஜீவன்த குலதுங்க ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
எனினும் , இவர்களில் ஜீவன்த குலதுங்க மற்றும் தரிந்து மெந்திஸ் மற்றும் காலி சர்வதேச மைதானத்தின் உதவி முகாமையாளரையும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் உடன் அமுலுக்கு வரும் வகையில் சேவையில் இருந்து நீக்கியது.
மேலும் , இது தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவை மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு தாம் முழு ஆதரவையும் தருவதாக இலங்கை கிரிக்கட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
international cricket stadium rules dhayasiri jayasekara
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- கிரிக்கெட் வீரர் தந்தை படுகொலை, பழிவாங்கப்பட்ட குடும்பம் : அதிர்ச்சி பின்னணி
- அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி
- 6000 சீனர்கள் இலங்கையில் : காரணம் இதுதான்!
- தனியான தலைவர்,தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர்களை தெரிவு செய்கிறது 16 பேர் அணி!
- இராணுவத் தளபதிகளை நீங்கள் இலக்கு வைத்ததை மறந்து விட்டீர்களா? : பொன்சேகா கேள்வி
- 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்
- 35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்
- ‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி!
- தெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை
- கொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொடூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்
- சீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)
- இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா
- கோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்
-
Time Tamil News Group websites :