பிக்பாஸ் வீட்டில் அன்பு வேஷம் போட்டு வந்த மும்தாஜின் முகத்திரை சமீபத்தில்தான் கிழிந்துள்ளது. கமல்ஹாசன் உட்பட அனைவரும் மும்தாஜின் அன்பு யுக்தியை புரிந்து கொண்டு அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். Bigg boss 1 contestant torture Mumtaz gossip
மும்தாஜ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததிலிருந்தே காலையில் சீக்கிரம் எழ முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன், எல்லா டாஸ்க்கும் செய்யமாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் .
இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்துள்ள பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களான சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர். மும்தாஜ்க்கு வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர்.
இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், ஒரு வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்தவேண்டும் என்பதால் தான் இப்பிடி செய்கிறோம் என கூறுவதாக ப்ரோமோவில் வருகிறது.
இதனால் மும்தாஜ் உள்ளுக்குள் அதிர்ச்சி அடைந்தாலும் எப்போதும்போல் வெளியே இயல்பாக இருப்பது போல் நாடகமாடுவது அவரது முகபாவனையில் விளங்குகிறது. பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே இருக்கும் இந்த ஒரு வாரம் மும்தாஜூக்கு சிக்கல்தான் என்பது தெளிவாகிறது.