செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதை தடை செய்யும் திட்டம் இல்லை: Spotify CEO

0
298

செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை முற்றிலுமாக தடை செய்ய Spotify திட்டமிடவில்லை என அதன் தலைமை நிர்வாக இயக்குனர் Daniel Ek தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட இசையின் பரவல் மற்றும் தொழில்துறையில் அதன் தாக்கம் குறித்து படைப்பாளிகளின் அச்சத்தின் மத்தியில் அவர் இவ்வாறு BBC செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

” Auto Tunningற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கது. உலகின் மிகவும் பிரபலமான Audio Streamig சேவையான Spotify இன் வெற்றிக்கு செயற்கை நுண்ணறிவு அவசியம்.

இசையை உருவாக்குவதில் தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடுகள் இருந்தாலும் அவர்களின் அனுமதியின்றி மனித கலைஞர்களை ஆள்மாறாட்டம் செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தக்கூடாது.” என தெரிவித்தார்.