மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை !

0
363

பற்கள் மஞ்சளாக இருப்பது ஒரு சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இது அவர்களது தன்னம்பிக்கையை குறைத்து பல வழிகளில் பிரச்சனைகளைத் தருகிறது.

பற்களை ஒழுங்காக பராமரிப்பதன் காரணமாகவும் அதனை சரியாக சுத்தம் செய்யாததன் காரணமாகவே மஞ்சள் பற்கள் ஏற்படுகிறது.

எளிமையான தீர்வுகள்

வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நாம் எளிமையாக போக்கலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை:

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை என்பது பற்களை வெண்மையாக்க கூடிய ஒரு பிரபலமான காம்பினேஷன் ஆகும். பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டும் பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்க பெரிதும் உதவுகிறது.

மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை சொல்லுங்க! | Say Goodbye To Yellow Teeth Beauty

இதனை பயன்படுத்துவதற்கு சிறிதளவு பேக்கிங் சோடாவில் ஓரிரு துளிகள் எலுமிச்சை சாறு ஊற்றி, ஒரு பேஸ்ட்டாக குழைத்து அதனை வழக்கமாக பல் துலக்குவது போல பற்களில் மென்மையாக தேய்க்க வேண்டும்.

பின்னர் ஒரு சில வினாடிகளுக்கு பிறகு வாயை தண்ணீர் கொண்டு கழுவி கொள்ளலாம்.

ஆனால் அதிகப்படியான பேக்கிங் சோடா ஈறுகளுக்கு ஆபத்தானது. அடிக்கடி இதனை பயன்படுத்தக் கூடாது.

 தேங்காய் எண்ணெய் :

பற்களை வெண்மையாக்குவதில் தேங்காய் எண்ணெய் ஒரு மேஜிக் போல செயல்படுகிறது. பல வைத்தியங்களை முயற்சி செய்தும், மஞ்சள் நிற பற்களை போக்க முடியாமல் டயர்ட் ஆகி போன உங்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை சொல்லுங்க! | Say Goodbye To Yellow Teeth Beauty

இதற்கு தேங்காய் எண்ணெய்யை பற்கள் மற்றும் ஈறுகளில் குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களுக்காவது மென்மையாக தேய்க்க வேண்டும். இது மஞ்சள் கரையை போக்குவது மட்டுமல்லாமல் பற்சொத்தையையும் தடுக்க உதவும்.

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக பற்களை வெண்மையாக நல்லெண்ணையையும் பயன்படுத்தலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

உங்கள் பற்கள் வைரம் போல மின்ன வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கான சிறந்த ஆப்ஷன் ஆப்பிள் சைடர் வினிகர் ஆகும்.

இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை கொன்று, பற்களில் படிந்திருக்கும் கரைகளை போக்க வல்லது.

மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை சொல்லுங்க! | Say Goodbye To Yellow Teeth Beauty

இதனை பயன்படுத்துவதற்கு சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து மவுத்வாஷ் போல வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம்.

அப்படி இல்லாமல் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் டூத் பிரஷை ஆப்பிள் சைடர் வினிகரில் முக்கி பற்களை பொறுமையாக ஒரு சில நிமிடங்களுக்கு தேய்க்கலாம். பின்னர் தண்ணீர் வைத்து வாயை கொப்பளித்து விடுங்கள்.

அதிகப்படியான ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் ஈறுகளை அரித்துவிடும்.

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு :

பற்களை வெண்மையாக ஈசியான ஒரு வீட்டு வைத்தியத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த பைத்தியம் உங்களுக்கு தான். கடுகு எண்ணெயில் பாக்டீரியாக்களை எதிர்க்க கூடிய பண்பு உள்ளது.

மஞ்சள் பற்களுக்கு இனி குட்-பை சொல்லுங்க! | Say Goodbye To Yellow Teeth Beauty

அதோடு உப்பானது பற்களில் படிந்திருக்கும் கறைகளைப் போக்கக்கூடியது. இவை இரண்டும் சேர்ந்து பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை அகற்றும்.

இதற்கு கடுகு எண்ணெய் மற்றும் உப்பை கலந்து பற்களில் ஒரு சில நிமிடங்கள் பொறுமையாக தேய்க்க வேண்டும். பின்னர் தண்ணீரால் வாயை கொப்பளிக்கவும்.

ஆனால் மிதமான அளவு பயன்படுத்த வேண்டும் .